பயனர்கள்.
ript>
திங்கள், 8 நவம்பர், 2010
அவன் இவனில் மது ஷாலினி...!!
அவன் இவன்’ படத்தில் தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். ஆர்யா, விஷால் நடிக்கும் படம் ‘அவன் இவன்’. பாலா இயக்குகிறார். காமெடி படமான இதில், சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினை தேடி வந்தனர். இப்போது தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது தேனி அருகே நடந்து வருகிறது.
வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை..!!
வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இந்த திட்டத்தின்கீழ் தரமுயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளைகாலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, முமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயரதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை..!!
மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளிக்கச்சென்ற பதுளை ஹஸலக்க என்ற பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சேத்தர பண்டார மெதிவெக (40வயது) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக நேற்றையதினம் பாசிக்குடாவிற்கு வந்துள்ளார். இவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இக்கடல் பரப்பில் எச்சரிக்கை பலகைகள் இடப்படாமையினால் இவ்வாறான மரணங்கள் தொடர்கின்றன.
பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி..!!
பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி- பிரபாகரன் உயிரிழக்கவில்லை எனப் பிரச்சாரம் செய்து, அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டல் முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பேரின்பநாயகம் சிவகரன் எனப்படும் நெடியவன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து அதன்மூலம் நிதி திரட்டுவதற்கு முனைப்பு காட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், புலிகள் அமைப்பை மீளமைப்பதற்கு நிதி உதவிகளை வழங்குமாறும் கூறி நெடியவன் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டியுள்ளதாக ரொஹான் குணரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். நெடியவனின் இந்தப் பிரச்சாரத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செவி சாய்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தன்னார்வ அடிப்படையில் நிதி திரட்டுதல் மட்டுமன்றி போலியான கடன் அட்டைகள், காசோலை மோசடி, சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழிகளிலும் பணம் திரட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடைச் சிறையில் பொலீசார்மீது கைதிகள் தாக்குதல், விசாரணைகள் தொடர்கின்றன..!!
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக்காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்றிருந்த விசேட பொலிஸ் குழுமீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக்காவலர்களும் காயமடைந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும்போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் சிலர் பொலிஸார்மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக்காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி.ஐ.டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளது.
அஜீத் பிரியாணி சமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்..!!
அல்டிமேட் ஸ்டார் அஜீத் சினிமா மற்றும் ரேஸ் துறையில் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் வீட்டிலும் ஒரு கலையில் சிறந்தவராக உள்ளாராம். அப்படி என்ன கலை தெரியுமா... சமையல் கலை தான். குறிப்பாக பிரியாணி சமைப்பதில் அஜீத் எக்ஸ்பர்ட்டாம். பிரியாணி சமைப்பதையை ஹாபியாக கொண்ட நம்ம அல்டிமேட் ஸ்டார் வீட்டில் அனைவரையும் உட்காரவைத்து பரிமாறுவாராம்.
ஞாயிறு, 7 நவம்பர், 2010
தங்காலை நீதிமன்றக் கட்டடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு..!!
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்காலை நீதிமன்றக் கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 358 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதியில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் மாவட்ட நீதி மன்றம் உயர் நீதிமன்றம் சட்ட உதவி காரியாலயம் தொழில் நியாய சபை என்பவையூம் உள்ளட ங்கியுள்ளதோடு இவை நவீன வசதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதி நீதிஅமைச்சர் ரெஜினோல்ட் குரே உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் சீனா பயணம்..!!
வடமேல் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 24 மாகாணசபை உறுப்பினர்கள் கடந்த வெள்ளியன்று சீனாவுக்குப் பயணமானார்கள். கல்விச் சுற்றுலா ஒன்றின் நிமித்தம் சீனா சென்றுள்ள இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி நாடு திரும்பவுள்ளனர். இக்குழுவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஐந்துபேர் கலந்து கொள்கின்றனர். மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த, ஏ.எச்.எம். றியாஸ், ஜானக டி. சொய்சா, சிந்தக மாயாதுன்ன, மற்றும் சுமல் திசேரா ஆகியோருடன் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தோரும் சீனா சென்றுள்ளனர். சுற்றுலாவுக்கு வடமேல் மாகாண சபை 85லட்சம் ரூபாவை ஒதுக்கிட்டுள்ளதாகவும், இக்குழுவில் இரு மாகாணசபை அதிகாரிகள் செல்வதாகவும் சபையின் செயலாளர் எஸ்.ஆர்.ஏ. சமரகோன் தெரிவித்துள்ளார். சுற்றுலாவில் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் நிமல் ஹேரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் சுற்றுலாவில் கலந்து கொள்ளவில்லை.
சம்பூர், நீர்கொழும்பு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு..!!
திருமலை மாவட்டம் சம்பூர் மற்றும் கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் ஏற்றிவந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி இந்தியா இலங்கையிடம் வேண்டுகோள்..!!
மீளக் குடியேறியோருக்கான, இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியைச் சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இலங்கையின் வடக்கு மோதலின்போது இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டித்தர வேண்டும் என்ற திட்டம் முன்னேற்றத்தில் இருக்கிறது. விரைவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்தி இருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் பீ.சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓட்டலில் மர்ம குரல் - ஜெனிலியா ஓட்டம்..!!
ஆஸ்திரேலியாவுக்கு இந்தி பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார் ஜெனிலியா. ஓட்டலில் மர்ம குரலை கேட்டவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்த அனுபவம் பற்றி கூறியது: சமீபத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற¤ருந்தேன். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றதும் ஏதோ ஒரு மர்ம இடத்துக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன். சுவர் முழுவதும் பயங்கரமான உருவங்கள் வரையப்பட்டிருந்தன. சமாளித்துக்கொண்டு தங்கினேன். நேரம் செல்லச் செல்ல ஏதோ ஒரு மர்ம குரல் கேட்கத் தொடங்கியது. யாரோ வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த குரல் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்ததால் கூர்ந்து கவனித்தேன். சுவரில் விரிசல் விடுவதுபோல் சத்தம். உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட தங்க விரும்பாமல், வெளியில் ஓடி வந்தேன். வெளியில் வந்த பிறகுதான் உடன் வந்தவர்களும் அதேபோல் சத்தம் கேட்டு அறையிலிருந்து ஓடிவந்திருப்பது தெரிந்தது. அதன் பின் வேறு ஓட்டலில் சென்று தங்கினோம். இது திகில் அனுபவமாக இருந்தது.
சனி, 6 நவம்பர், 2010
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளம் சிங்களப் பயணிகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது..!!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளம் சிங்களப் பயணிகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனையிறவு சந்தியில் வைத்து சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு சில விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளதாக இராணுவத்தின் ஏழாம் படையணி தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாண குடா நாட்டில் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பிரதேசங்கள், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வணக்கத் தலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்றன தனித்தனியாக விளக்கப்படவுள்ளன.சில நபர்களின் கவனயீனத்தினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.வடக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும் என்பதனை இந்த வழிகாட்டல்களின் மூலம் தெளிவுபடுத்த உள்ளதாக உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் கடத்த முற்பட்ட இந்தியர்கள் கைது ..!!
30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் கடத்துவதற்கு முற்பட்ட இந்தியர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பீடி வகைகளுடன் நான்கு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிலாவத்துறை கடற்பகுதியில் இந்த மீன்பிடிப் படகினை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த படகில் சுமார் 750,000 பீடிகள் காணப்பட்டதாகவும், இடத்தை அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஜீ.எஸ்.பி கருவியொன்று, கையடயக்கத் தொலைபேசி ஒன்று ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.பீடிகளை பாதுகாப்பாக கடத்தும் நோக்கில் பொலித்தீன் பைகளினால் பொதி செய்து இலங்கைக்கு கடத்த முற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு..!!
கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகாத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வுகளின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல முக்கியதர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் சாட்சிங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிகவும் புரதான இரு விமானங்கள்..!!
இலங்கையின் மிகவும் புரதான இரு விமானங்கள் மக்கள் பார்வைக்காக இன்று வானில் பறக்கின்றன என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. விமானப்படை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிகவும் புராதன விமானங்களான 'டய்கர் மொத்' மற்றும் 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படைக்குச் சொந்தமான 'சிப் மன்க்" ஆகியனவே ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பறக்கின்றன. மக்களின் பார்வைக்காக 11.00 மணி வரை விமானங்கள் இரண்டும் பறக்கவுள்ளன.சிப் மன்க்' விமானம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)