பயனர்கள்.

ript>

புதன், 20 மே, 2015

பூ ஒன்றை கசக்கி தங்கள் காம பசிக்கு இரையாக்கி கொண்டவர்கள்.



 
 
பூ ஒன்றை கசக்கி தங்கள் காம பசிக்கு இரையாக்கி கொண்டவர்கள்.
தமிழ் மண்ணில்.
பிறந்த ஈன பிறவிகள்,
மண்ணின் பெருமையையும்
மாதர்களின் மதிப்பையும் ...
அறியாத யடங்கள்
தன் தாயும் தங்கையும் ஒரு பெண் என்று அறியாத தரம் கெட்டவர்கள்.
அதிகமாக பகிருங்கள் இவர்கள் முகங்களை
இந்த சமூகத்தில் வாழ அருகதையற்றவை...

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ரம்யா பார்ட்டியில் த்ரிஷா அரட்டை ..!!

புத்தாண்டு என்றதும் விடிய விடிய பாலிவுட்டில் பார்ட்டிகள் நடக்கும். அந்த பாணி கோலிவுட்டுக்கும் வந்துவிட்டது. புத்தாண்டுக்கு நம்மூர் நட்சத்திரங்கள் பார்ட்டி வைத்து அசத்தினார்கள். கடற்கரை பகுதியில் உள்ள தனது வீட்டில் ரம்யா கிருஷ்ணன் நண்பர்களுக்காக பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். த்ரிஷா, சோனியா அகர்வால், அர்ஜுன், ஜெகபதிபாபு என நட்சத்திரங்கள் வந்து அசத்தினார்கள். த்ரிஷாவின் அரட்டை கச்சேரி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாம். நிறைய கடி ஜோக்குகள் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாராம் த்ரிஷா. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மணிரத்னம்&சுகாசினி அளித்த பார்ட்டியில் மோகன்லால் மற்றும் நட்சத்திரங்கள் ஜொலித்தனர். புத்தாண்டுடன் மனைவி லிசியின் பிறந்தநாளையொட்டி பிரியதர்ஷன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் டைரக்டர்கள், நடிகர்கள், நடிகைகள் என திரையுலக முக்கியஸ்தர்கள் திரண்டனர்.கொட்டிவாக்கம் கடற்கரை பங்களாவில் நண்பர்களுக்கு பார்ட்டி அளித்தார் விஜய். வால்மீகி நகரில் உள்ள பங்களாவில் அஜீத் அளித்த பார்ட்டியில் வெங்கட்பிரபு அண்ட் கோ கலந்துகொண்டனர். தேனியில் நடந்த ஷூட்டிங்கில் ஆர்யா, விஷால் தனது யூனிட்டாருடன் பார்ட்டி கொண்டாடினர். மாமல்லபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் பிரகாஷ்ராஜ் மனைவி போனி வர்மா, உறவினர்கள், நண்பர்களுடன் புத்தாண்டு பார்ட்டியில் திளைத்தார். நடிகர் தனுஷ் காரைக்குடியில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றார். அங்கேயே மனைவி ஐஸ்வர்யாவை வரவழைத்து யூனிட்டாருக்கு விருந்து அளித்தார். நடிகர் சிம்பு நண்பர்கள் சிலருடன் வெளிநாடு பறந்தார். ரீமா சென், ஸ்ரேயா தோழிகளுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினர்.

சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை 10 ஆம் திகதி விடுமுறை ..!!

மலையகத்தின் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் அனுஸியா சிவராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மத்திய மாகாணத்திலுள்ள நுவரெலியா ,கண்டி ,மாத்தனை ஆகிய மாவட்டங்களில் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழக்கைப்பாதிப்படைந்து உள்ளது.சில பிரதேசங்களில் போக்குவரத்துப்பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன..இதனைக்கருத்திற்கொண்டு மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை 10 ஆம் திகதி தினம் மாணவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் அனுஸியா சிவராஜா மேலும் தெரிவித்தார்.

இந்தோனேசியா கடலில் நிர்கதிக்குள்ளான இலங்கை மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது..!!

இந்தோனேசியா கடலில் நிர்கதிக்குள்ளான இலங்கை மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சங்கரபுதா-2 என்ற படகு கடந்த நவம்பர் 2ம் திகதி இலங்கைக் கரையிலிருந்து புரப்பட்டுச் சென்று பின்னர் தொடர்பற்றுப் போனது. ஆதன் பின்னர் அவர்கள் இந்தோனீசியக் கடலில் தத்தளிப்பது தொடர்பாகக் அண்மையில் கிடைத்த தகவலை அடுத்து அங்கு படகொன்று அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பலப்பிட்டிய பகுதி மீனவர்கள் இன்று இது தொடர்பாக ஒரு ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை முதல் காணவில்லை..!!

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மனைவியினால் முறையிடப்பட்டுள்ளது.உரும்பிராயைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர் நேற்று மாலை வரை வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்.

இந்தியில் நடிக்க அனுஷ்கா மறுப்பு..!!

இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘சிங்கம்’. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக அனுஷ்காவை கேட்டார் ரோஹித். ஆனால், மறுத்துவிட்டார். இதுபற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது, ‘தென்னி ந்திய சினிமாவில் பிசியாக இருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னையும் உள்ளது. இதனால் ரோஹித்திடம் நட்பாக சொல்லி மறுத்துவிட்டார்’ என்றனர்.

வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி..!!

கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் வினோத் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கற்பாறைக்குள் சிக்குண்டுள்ள ஏனைய ஐந்து பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வெடி மருந்துகளை பயன்படுத்தி கற்பாறையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.